Friday, July 3, 2020

சாத்தான்குளம் சம்பவம்..போலீசுக்கு நண்பர்கள் மக்களுக்கு எதிரிகள்..! அந்த 5 பேர் ஓட்டம்

சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையதாக குற்றச்சாட்டுக்குள்ளான ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் தன்னார்வலர்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீசுக்கு நண்பனாகவும், பொதுமக்களுக்கு எதிரியாகவும் வலம் வந்ததாக புகாருக்குள்ளான அந்த 5 பேர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.


சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜ், பென்னிக்ஸ் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சாத்தான் குளத்தில் ஒரு டீம், தூத்துக்குடியில் ஒரு டீம் என இரு இடங்களில் ஒரே நேரத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கொலைவழக்கில் கைதாகியுள்ள உதவி ஆய்வாளர் கொம்பன் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோருடன் படை தளபதிகள் போல கையில் இரும்பு பைப்புடன் வலம் வந்ததாக கூறப்படும் போலீஸ் நண்பர் குழுவை சேர்ந்த 5 பேரை அடையாளம் காணும் பொருட்டு, அந்த காவல் நிலையத்தில் கொரோனா தன்னார்வலர்களாக பணியில் இருந்த போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த 30 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

சிபிசிஐடி போலீசாரிடம் முன்னதாக சாட்சியம் அளித்துள்ள பலரும், ஜெயராஜும், பென்னிக்சும் தாக்கப்பட்டபோது, போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த 5 பேரும் உடனிருந்ததாக தெரிவித்துள்ளதன் அடிப்படையிலேயே விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து நடந்த இந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட 5 பேரும் ஆஜராகவில்லை. அவர்களது செல்போனும் சுவிட்ஜ் ஆப் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜரான போலீஸ் நண்பர் குழுவை சேர்ந்த 7 பேரும் சோதனை சாவடி பணியில் இருந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

காவல் நிலையத்தில் ஜெயராஜையும் பென்னிக்ஸையும் பிடித்து வைத்து தாக்கிய போலீசாருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த இந்த 5 பேரது புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வேகமாக பரப்பப்பட்டு வருகின்றது.

சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் போலீஸ் நண்பர்குழுவை சேர்ந்த அந்த 5 பேரை விசாரணைக்கு அழைப்பதே சிபிசிஐடி போலீசுக்கு சவாலாக மாறிஉள்ளது. இந்த 5 பேரை பிடித்து விசாரித்தால் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் கொடூர கொலைக்கான பின்னணி வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பர்க்கப்படுகின்றது.

இதற்கிடையே, சிபிசிஐடி போலீசுக்கு பயந்து ஓடி ஒளிந்த காவலர் முத்துராஜின் இருசக்கர வாகனம் கீழமங்கலம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அதன் அருகில் உள்ள இரு கிராமங்களில் உள்ள தனது உறவினர்கள் வீடுகளில் பதுங்கி இருக்கலாம் என்று தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் பூசனூர் அருகே அரசன் குளத்தில் வைத்து முத்துராஜை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடைய மற்றவர்கள் மீதும் கைது நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என்று சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் கொலைகார போலீசுக்கு நண்பர்களாகவும், அப்பாவி தந்தை மகனுக்கு எதிரியாகவும் கொடூரமாகவும் செயல்பட்ட அந்த போலீஸ் நண்பர்குழுவை சேர்ந்தவர்கள் மீதும் கடௌமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

TikTok G.P Muthu life biography | டிக் டாக் ஜி.பி.முத்து வாழ்க்கை வரலாறு!

3ஆவது வரைக்கும் படித்தவர்.10வயதில் வேலைக்கு சென்று சம்பாரிக்க ஆரம்பித்து28ஆவது வயதில் தனியாக தொழில் (Carpenter) ஆரம்பித்தார்.அண்...