Saturday, June 26, 2021

TikTok G.P Muthu life biography | டிக் டாக் ஜி.பி.முத்து வாழ்க்கை வரலாறு!

3ஆவது வரைக்கும் படித்தவர்.10வயதில் வேலைக்கு சென்று சம்பாரிக்க ஆரம்பித்து28ஆவது வயதில் தனியாக தொழில் (Carpenter) ஆரம்பித்தார்.அண்ணன் தம்பி சண்டையில் 136தையல் போடும் நிலைக்கு சென்றார். ஒரு விபத்தில் தம்பியை இழந்தார்.தம்பி குடும்பத்தையும் சேர்த்து பார்த்துக்க ஆரம்பித்தார்.அதே நேரம் தொழில் சருக்கல் என பல பிரச்சினைகளை சந்தித்தார். தனது 35வயதில் தான் முதல் Smart Phone வாங்கினார்.இந்த பிரச்சினைகளில் இருந்து மனதை திசை திருப்ப டிக்டாக் செய்ய ஆரம்பித்தார்.அதில் அடிமையாயகவும் மாறினார். ஒரு கட்டத்தில் டிக்டாக் தான் பொழப்பு என்றும் இருந்தார்.குடும்ப பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியாமல் தற்கொலை முயற்சியும் மேற்கொண்டார்.Tiktok தடை செய்யப்பட்ட பிறகு யூடியூப்பில் களம் இறங்கினார்.உலகம் முழுக்க பிரபலம் ஆனார். தற்போது ஆதித்யா நகைச்சுவை சேனலில் வேலை வாய்ப்பு வந்துள்ளது.சமீபத்தில் தான் ஐ20 கார் ஒன்று வாங்கினார் ...

ஒவ்வொருத்தரோட புன்னகைக்குப் பின் சொல்ல முடியாத பல சோகங்கள் புதைந்து தான் உள்ளது.
அந்த சிரிப்பு தான் மனுசன் ❤️

Friday, July 3, 2020

சாத்தான்குளம் சம்பவம்..போலீசுக்கு நண்பர்கள் மக்களுக்கு எதிரிகள்..! அந்த 5 பேர் ஓட்டம்

சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையதாக குற்றச்சாட்டுக்குள்ளான ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் தன்னார்வலர்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீசுக்கு நண்பனாகவும், பொதுமக்களுக்கு எதிரியாகவும் வலம் வந்ததாக புகாருக்குள்ளான அந்த 5 பேர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.


சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜ், பென்னிக்ஸ் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சாத்தான் குளத்தில் ஒரு டீம், தூத்துக்குடியில் ஒரு டீம் என இரு இடங்களில் ஒரே நேரத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கொலைவழக்கில் கைதாகியுள்ள உதவி ஆய்வாளர் கொம்பன் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோருடன் படை தளபதிகள் போல கையில் இரும்பு பைப்புடன் வலம் வந்ததாக கூறப்படும் போலீஸ் நண்பர் குழுவை சேர்ந்த 5 பேரை அடையாளம் காணும் பொருட்டு, அந்த காவல் நிலையத்தில் கொரோனா தன்னார்வலர்களாக பணியில் இருந்த போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த 30 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

சிபிசிஐடி போலீசாரிடம் முன்னதாக சாட்சியம் அளித்துள்ள பலரும், ஜெயராஜும், பென்னிக்சும் தாக்கப்பட்டபோது, போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த 5 பேரும் உடனிருந்ததாக தெரிவித்துள்ளதன் அடிப்படையிலேயே விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து நடந்த இந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட 5 பேரும் ஆஜராகவில்லை. அவர்களது செல்போனும் சுவிட்ஜ் ஆப் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜரான போலீஸ் நண்பர் குழுவை சேர்ந்த 7 பேரும் சோதனை சாவடி பணியில் இருந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

காவல் நிலையத்தில் ஜெயராஜையும் பென்னிக்ஸையும் பிடித்து வைத்து தாக்கிய போலீசாருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த இந்த 5 பேரது புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வேகமாக பரப்பப்பட்டு வருகின்றது.

சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் போலீஸ் நண்பர்குழுவை சேர்ந்த அந்த 5 பேரை விசாரணைக்கு அழைப்பதே சிபிசிஐடி போலீசுக்கு சவாலாக மாறிஉள்ளது. இந்த 5 பேரை பிடித்து விசாரித்தால் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் கொடூர கொலைக்கான பின்னணி வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பர்க்கப்படுகின்றது.

இதற்கிடையே, சிபிசிஐடி போலீசுக்கு பயந்து ஓடி ஒளிந்த காவலர் முத்துராஜின் இருசக்கர வாகனம் கீழமங்கலம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அதன் அருகில் உள்ள இரு கிராமங்களில் உள்ள தனது உறவினர்கள் வீடுகளில் பதுங்கி இருக்கலாம் என்று தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் பூசனூர் அருகே அரசன் குளத்தில் வைத்து முத்துராஜை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடைய மற்றவர்கள் மீதும் கைது நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என்று சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் கொலைகார போலீசுக்கு நண்பர்களாகவும், அப்பாவி தந்தை மகனுக்கு எதிரியாகவும் கொடூரமாகவும் செயல்பட்ட அந்த போலீஸ் நண்பர்குழுவை சேர்ந்தவர்கள் மீதும் கடௌமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

Thursday, October 10, 2019

Sindhu Samaveli Director Sami Controversial Speech Against Vijay


"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய #விஜய்" - Director Samy (மிருகம்,சிந்து சமவெளி)

#அமலாபாலை வைத்து இயக்கிய #சிந்து #சமவெளி #இயக்குனர் #சாமி வெளியிட்டுள்ள #அதிர்ச்சி #வீடியோ நடிகர் #விஜய் வாழ்க்கையில் மிகப்பெரிய நடிகர் அவர் ரசிகர்களை ஏமாற்றிய கிழார் என்றும் என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர் என்பது வெறும் பொய் என்றும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் மேலும். தனது ரசிகர்கள் விஜயை சந்திக்க வரும்போது "ரசிகர்களுக்கு வந்து கை கொடுத்தது வந்து போட்டோ எடுத்துட்டு கை கொடுத்து உள்ளே போய் டெட்டால் ஊற்றி கழுவிய" நானே பார்த்தேன் இது அவங்களோட உண்மையான நடிப்பு - Dirctor Vijay

Wednesday, May 1, 2019

நான் பாஜகவுக்கு செல்கிறேன் என்பது வடிகட்டிய பொய்

#BREAKING நான் பாஜகவுக்கு செல்கிறேன் என்பது வடிகட்டிய பொய்


உயிர்போகும் நாளில் அதிமுக கொடியை போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக கருதுகிறேன்


என் மீது பரப்பப்படும் அவதூறுகளையும், குற்றச்சாட்டுகளையும் அதிமுக தொண்டர்களும், மக்களும் ஏற்கமாட்டார்கள்


- துணை முதல்வர் ஓபிஎஸ் #OPS 

சபாநாயகரை தூண்டுகிறார் ஸ்டாலின்

எதிர்கட்சி தலைவர், மூன்று MLAக்கு காட்டும் அக்கறையை ஏன் 18 MLAகள் தகுதி நீக்கம் செய்யும் போது காட்டவில்லை.


உண்மையில் சபாநாயகர் மீது #திமுக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம், அவரை தூண்ட செய்வதாகவே தோன்றுகிறது

- #டிடிவிதினகரன் 


#அமமுக #அதிமுக 

பிரதமர் மோடியை களவாணி என விமர்சித்த மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை கடும் கண்டனம்!

#BIGNEWS


பிரதமர் மோடியை களவாணி என விமர்சித்த மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை கடும் கண்டனம்!


@DrTamilisaiBJP | @mkstalin 

TikTok G.P Muthu life biography | டிக் டாக் ஜி.பி.முத்து வாழ்க்கை வரலாறு!

3ஆவது வரைக்கும் படித்தவர்.10வயதில் வேலைக்கு சென்று சம்பாரிக்க ஆரம்பித்து28ஆவது வயதில் தனியாக தொழில் (Carpenter) ஆரம்பித்தார்.அண்...